71 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு : இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
4-ம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் 71 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, வருகிற 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதுவரை 3 கட்டமாக மொத்தம் 303 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில், நான்காம் கட்டத் தேர்தல், 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோன்று, பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு, காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனந்தநாக் தொகுதியில் மட்டும் 3, 4 மற்றும் 5 ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் 71 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
Next Story