இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சீன ஸ்மார்ட்போன்கள் : ஸ்மார்ட்போன் இறக்குமதி அதிகரிப்பு
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. விற்பனையாகும் 3 ஸ்மார்ட் போன்களில் இரண்டு சீன தயாரிப்பு என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி நிறுவனம் 20 சதவீத பங்கு வகிக்கிறது. அதற்கடுத்து விவோ, ரியல்மீ, ஓப்போ நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவைகளுக்கு அடுத்து சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உள்ளது. விவோ ஸ்மார்ட் போன் இறக்குமதி 119 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், ஓப்போ இறக்குமதி 28 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Next Story