நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் வழக்கு, நீதிபதிகள்அருண் மிஸ்ரா, ரோகிங்டன் பாலி நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் உத்சவ் பைன்ஸ் சார்பில் கூடுதல் ஆவணங்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என எச்சரித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பணம் மற்றும் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்தி இயக்க நினைப்பவர்களை கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக நீதித்துறை மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுவதாவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
Next Story