3,351 கிராம் எடையுள்ள உற்சவரின் 3 கிரீடங்கள் திருட்டு - களத்தில் இறங்கிய 6 தனிப்படை போலீசார்
திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி கோவிலில் மூன்று கீரிடங்களை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி கோவிலில் மூன்று கீரிடங்களை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி சன்னதியில் உற்சவருக்கு அலங்கரிக்கக் கூடிய மூன்று கிரீடங்கள் காணாமல் போனது. ஆயிரத்து 351 கிராம் எடை கொண்ட மூன்று கீரிடங்களின் மதிப்பு 42 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் புகார் அளித்தையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக வைத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் திருட்டு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த ஆகாஷ் பிரகாஷ் என்பவர் இந்த வழக்கிற்கு தொடர்புடையவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகாஷ் பிரகாஷ் செல்போனை டிராக் செய்தபடி பின் தொடர்ந்த போலீசார் இறுதியாக ரேணிகுண்டாவில் கைது செய்தனர். திருடிய நகைகளுடன் மகாராஷ்டிர மாநிலம் சென்ற திருடன், மூன்று கிரீடங்களையும் உருக்கி தங்க கட்டியாக மாற்றி, விற்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஆகாஷ் பிரகாஷை கைது செய்த போலீசார் திருடப்பட்ட கீரிடத்தின் உருக்கப்பட்ட தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story