"விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்" - வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு 12 மணி நேரம் நிரந்தர மின்சாரம் வழங்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் சத்தியவேட்டில் உள்ள ஐஐடி தொழில்நுட்ப பல்கலைகலைக்கழக விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் 21 சதவீதம் பேர் ஏழைகளாகவும், 22 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாமலும் இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார்.மேலும், விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் தான், விவசாயம் செழித்து, நாடு வளர்ச்சி அடையும் எனவும் அவர் கூறினார்.
Next Story