திருப்பதி : காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்கள் - காதல் ஜோடி தற்கொலை

திருப்பதியில் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த காதலர்கள் செல்பி வீடியோ எடுத்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பதி : காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்கள் - காதல் ஜோடி தற்கொலை
x
ஸ்ரீ காளஹஸ்தி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும், திருப்பதியை அடுத்த மோராவாரி பள்ளியைச் சேர்ந்த தனஞ்ஜெயன் என்ற 23 வயது இளைஞரும்  கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இதனை அறிந்த பெற்றோர் அவர்களை எச்சரித்த நிலையில், கடந்த 12ஆம் தேதி பல்லவி தனது வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். மகள் காணாமல் போனது குறித்து சந்திரகிரி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். 

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சந்திரகிரி ரயில் தண்டவாளம் அருகே இருவர் பலியானது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாருடன் பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது, உயிரிழந்தது தனஞ்செயன் மற்றும் பல்லவி என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களது உடமைகளை ஆராய்ந்தபோது அதில் இருந்த செல்போனில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் மற்றும் தற்கொலைக்கு முன்பாக எடுத்த வீடியோவும் இருந்துள்ளது. பெற்றோர்கள் காதலை ஏற்காததால், இந்த முடிவை எடுத்ததாக காதல் ஜோடி அந்த செல்ஃபி வீடியோவில் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்