"பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை இல்லை" - தடை விதிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
'பி எம் நரேந்திரமோடி' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
'பி எம் நரேந்திரமோடி' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மோடியின் வாழ்க்கை வரலாறு படம் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வெளிவர இருந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தொடங்கவுள்ள நாளன்று படத்தை வெளியிட கூடாது என்று காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தற்போது படத்திற்கான தடை நீக்கப்பட்டதை அடுத்து, இன்னும் தணிக்கை சான்றிதல் பெறப்படாத நிலையில், அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் படம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. உலகெங்கும் 38 நாடுகளில் படம் வெளியாகவுள்ளது. இதில் மோடியாக பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
Next Story