நாளிதழில் வெளியான தகவலை ஆதாரமாக எடுக்கலாமா? : ரஃபேல் விவகாரத்தில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து கசிந்த முக்கிய தகவல்களை, ஆதாரமாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து கசிந்த முக்கிய தகவல்களை, ஆதாரமாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. ரஃபேல் ஒப்பந்ததைத்தை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நாளிதழில் வெளியான கட்டுரை அடிப்படையில், சி.பி.ஐ. சாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரசாந்த் பூசன், யஸ்வந்த் சின்கா மற்றும் அருண் ஷோரி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அரசின் அனுமதி இல்லாமல் நகல் எடுத்ததை ஆவணமாக ஏற்க கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story