மத்திய பிரதேசம் : 50 இடங்களில் வருமான வரி சோதனை

மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மத்திய பிரதேசம் : 50 இடங்களில் வருமான வரி சோதனை
x
மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கோடிக்கணக்கான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. கடந்த ஆண்டு இறுதியில், மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து, கமல்நாத், முதல்-அமைச்சர் ஆனார். தற்போது, நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் 'ஹவாலா' பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் புகார் வந்ததால், 50 இடங்களில் ஒரே நேரத்தில், அதிரடி சோதனை நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்