மோடியை எனக்கு பிடிக்கும் - அவருக்கு தான் என்னை பிடிக்காது - காங். தலைவர் ராகுல் காந்தி பேச்சு
தனக்கு மோடியை பிடிக்கும் என கூறியுள்ள ராகுல் காந்தி அவருக்குத் தன்னை பிடிக்காது என்று தெரிவித்துள்ளதுள்ளார்..
மகாராஷ்டிராவின் புனேவில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சிறு வயதில் இருந்தே பல வன்முறை சம்பவங்களை பார்த்துள்ளதாகவும், வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்..தன்னை பாஜக வெறுக்கலாம் எனவும் ஆனால் பாஜக மீதும் தனக்கு வெறுப்பு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பு ஒரு மோசமான நடவடிக்கை என்பதை எந்த ஒரு பொருளாதார நிபுணரும் ஒப்புக்கொள்வார் என்று கூறிய அவர், அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story