பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி வழக்கு : விசாரணைக்கு ஆஜராக 11 அதிகாரிகளுக்கு சம்மன்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்ய, அந்த வங்கியின் 11 அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி தொடர்பாக விசாரணை செய்ய, அந்த வங்கியின் 11 அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடிக்கு கடன் அளித்த வகையில் 13 ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றார். இந்த மோசடி தொடர்பாக தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் மேத்தா, செயல் இயக்குநர் சஞ்சீவ் சரண் மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி உஷா ஆனந்த சுப்ரமணியன் உள்பட 11 பேருக்கு உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
Next Story