நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி : பெட்ரோல், டீசல் தேவை அதிகரிப்பு
இந்தியாவில் பெட்ரோல் பொருட்களின் தேவை பிப்ரவரி மாதத்தில் 3 புள்ளி 87 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பெட்ரோல் பொருட்களின் தேவை பிப்ரவரி மாதத்தில் 3 புள்ளி 87 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், பிப்ரவரி மாதத்தில் 17.41 மில்லியன் டன் எரிபொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட அதிகம் என்றும், கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 16.77 மில்லியன் டன் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. இந்தியாவின் பெட்ரோலியத் தேவை நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அதிகரிக்கும் என்றும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல், டீசல் தேவை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
Next Story