வெளியுறவு கொள்கைகளை டிவிட்டரில் தீர்மானிக்க முடியாது

ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி
வெளியுறவு கொள்கைகளை டிவிட்டரில் தீர்மானிக்க முடியாது
x
ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன்  அசார் முகமதுவை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீன அதிபரை கண்டால் மோடிக்கு பயம் என்றும், இந்தியாவுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் பலவீனமான பிரதமர் வாயை திறப்பதில்லை என்று மோடியை ராகுல் காந்தி டிவிட்டரில் கடுமையாக சாடி இருந்தார்.இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், வெளியுறவு கொள்கைகளை டிவிட்டரில் தீர்மானிக்க முடியாது என்றும்,  பன்னாட்டு விவகாரங்களில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று ராகுல் காந்திக்கு தெரிவதில்லை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்