ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை : ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார். இதற்கு முன்பாக ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெங்கடேஷ் நாயக் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். அதில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிது காலத்துக்கு எதிர்மறையான பாதிப்பு ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
Next Story