10 நாள் திருவிழாவுக்காக சபரிமலை கோவில் நடைதிறப்பு
சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி நேற்று மாலை நடை திறக்கப்பட்டது
சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.தர்ம சாஸ்தா கோயில் முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கும் கோவில் விழா 21 ஆம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.இந்த விழாவில் தங்க முலாம் பூசப்பட்ட கருவறைக்கான கதவு சமர்ப்பிக்கப் படுகிறது.உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெண்கள் சிலர் கோயிலுக்குள் நுழைந்ததால் பெரும் பதற்றம் நிலவியது.அவர்களுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் போராட்டம் வெடித்தது..இந்நிலையில் நேற்று மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் வரலாம் என கூறப்படுவதால், 3 எஸ்.பி.,க்கள் தலைமையில் பம்பை,நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
Next Story