கேரள முதல்வரின் படத்தோடு வைக்கப்பட்ட விளம்பர பலகை : ரயில்வே அதிகாரிகள் விளம்பர பலகையை அகற்றியதால் பரபரப்பு
திருவனந்தபுரத்தில் கேரள முதல்வரின் படத்தோடு வைக்கப்பட்ட விளம்பர பலகையை ரயில்வே அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு பதவியேற்று ஆயிரம் நாட்கள் நிறைவான நிலையில், கேரளா முழுவதும் விளம்பர பலகை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் கேரள முதல்வரின் புகைப்படத்துடன் இருந்த விளம்பர பலகைகளை ரயில்வே அதிகாரிகள் திடீரென அகற்றினர். இதனால், அப்பKகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., சம்பத் தலைமையில் ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பிறகு, ரயில்வே அதிகாரிகள் மீண்டும் விளம்பர பலகையை வைக்க அனுமதி அளித்தனர்.
Next Story