ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் அன்னிய முதலீடு 7 % சரிவு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 7 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் அன்னிய முதலீடு 7 % சரிவு
x
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 7 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 35. 94 பில்லியன் டாலராக இருந்த அன்னிய நேரடி முதலீடு, நடப்பு நிதியாண்டில் 33. 49 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் சேவைத்துறைக்கு அதிகபட்சமாக 5.91 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு கிடைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த 9 மாத காலக்கட்டத்தில் அதிகளவில் இந்தியாவில் அன்னிய முதலீடு செய்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்திலும் தொடர்ந்து மொரீசியஸ், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளதும் அதில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்