ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் காங்கிரஸ் அரசை விட குறைந்த விலையில்தான் பாஜக அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை
x
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். 141 பக்கங்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிர்ணயித்ததை விட 2 புள்ளி 86 சதவீதம் குறைவான விலையிலேயே பாஜக ஆட்சியில் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 17 புள்ளி 8 சதவீதம் அளவுக்கு பணம் மிச்சமாகி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்