"ஏழைகளை சுரண்டியவர்களை பாதுகாக்க போராடுவதா?" - மம்தா பானர்ஜி மீது மோடி கடும் தாக்கு

ஏழைகளை சுரண்டியவர்களை பாதுகாக்க ஒரு முதலமைச்சரே முன்வந்திருப்பது மேற்கு வங்கத்தில் தான் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஏழைகளை சுரண்டியவர்களை பாதுகாக்க போராடுவதா? - மம்தா பானர்ஜி மீது மோடி கடும் தாக்கு
x
ஏழைகளை சுரண்டியவர்களை பாதுகாக்க ஒரு முதலமைச்சரே முன்வந்திருப்பது மேற்கு வங்கத்தில் தான் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பை குரியில் நடந்த பா.ஜ.க .பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், லஞ்ச லாவண்யத்தை பாதுகாக்க ஒரு முதலமைச்சரே வீதிக்கு வந்து தர்ணா போராட்டம் நடத்துவது இந்த மண்ணில் தான் நடந்துள்ளதாக கூறினார்.  கலை மற்றும் கலாசாரத்திற்கு பெயர் பெற்ற மேற்குவங்கம் தற்போது வன்முறை மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான வழிகளால் அறியப்படுவதாகவும் மோடி தெரிவித்தார். ஊழலில் ஊறி திளைத்தவர்கள் மோடி என்ற பெயரை கேட்ட உடனேயே, தற்போது அஞ்சி நடுங்குவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்