ஜம்மு காஷ்மீரில் புதிய விமான நிலையத்துக்கு அடிக்கல் : பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், லே நகரில் புதிய விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதுடன், பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், லே நகரில் புதிய விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதுடன், பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்து உரையாற்றினார். காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக புதுடெல்லியிலிருந்து லே நகரை இணைக்கும் ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை 15 நாட்களுக்கு அனுமதிக்கும் வகையில், நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன என்றும் மோடி குறிப்பிட்டார். லடாக் சுயாட்சி சபைக்கு கூடுதல் அதிகாரகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். முன்னதாக, இன்று காலை லே நகருக்கு வந்த பிரதமர் மோடி அங்கு உள்ளூர்வாசிகளுடன் கலந்துரையாடினார்.
Next Story