மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமர் ஆவார்கள் - அமித் ஷா
மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் பிரதமர் ஆவார்கள் என்று பா.ஜ.க.தேசிய தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்தார். மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கட்கிழமை மாயாவதியும், செவ்வாய்கிழமை அகிலேஷ் யாதவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள் என கேலி செய்த அமித்ஷா, ஞாயிறு அன்று மத்திய அரசு இயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story