ஆந்திர மாநிலம் : 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை

ஆந்திர மாநிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து, கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் : 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை
x
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தும்ர குண்டா கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் சிக்கன் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் கூறி விடுவதாக சிறுமி கூறியதால் அவர் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொல்ல முயன்றுள்ளார். ஆனால், சிறுமி தப்பிச் சென்று பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து  காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, ஜெயராஜை கைது செய்யக் கோரி சாலை மறியல் நடைபெற்றது. தலைமறைவாகி இருந்த ஜெயராஜை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்