மருத்துவர் இல்லத்தில் 150 சவரன் நகை திருட்டு : கைரேகை, தடயங்களை சேகரித்து விசாரணை

புதுச்சேரியில், மருத்துவர் இல்லத்தில் 150 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் இல்லத்தில் 150 சவரன் நகை திருட்டு : கைரேகை, தடயங்களை சேகரித்து விசாரணை
x
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் வசித்து வரும் மருத்துவர் வடிவேல், இல்லத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வடிவேலு அளித்த புகாரின் பேரில், அங்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். வீட்டின் பின் மற்றும் முன் பக்க கதவை உடைக்காமல் பீரோவில் இருந்த 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால், நெருங்கிய உறவினர்கள் இந்த செயலில்  ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொள்ளையர்கள் யார் என்பது குறித்து தன்வந்திரி போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்