குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
x
'குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க' உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 
பா.ஜ.க. வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய்,  தாக்கல் செய்த மனுவில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 8 ஆயிரத்து 63 வேட்பாளர்களில்  ஆயிரத்து 398 பேர் குற்ற வழக்குகளிலும், அதில், 889 பேர் கடுமையான வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, குற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்குவதை தடை செய்யுமாறு, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ''இந்த மனு குறித்து தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்றும், மனுதாரர் நேரடியாக தேர்தல் ஆணையத்தை அணுகி, கோரிக்கை விடுக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்