கும்பமேளா மூலம் ரூ.1.2 லட்சம் கோடி வருமானம்

கும்பமேளா மூலம் சுமார் 1 புள்ளி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. தெரிவித்துள்ளது
கும்பமேளா மூலம் ரூ.1.2 லட்சம் கோடி வருமானம்
x
கும்பமேளா  மூலம் சுமார் 1 புள்ளி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. தெரிவித்துள்ளது. 45  நாட்கள் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்காக உத்தர பிரதேச அரசு 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், அதைவிட  20 மடங்கிற்கு மேல் வருவாய் எதிர்பார்க்கலாம் என்றும், சுமார் 6 லட்சம் பேருக்கு தற்காலிக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் சி.ஐ.ஐ.  கூறியுள்ளது. கும்பமேளா மூலம் ராஜஸ்தான், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களும் வர்த்தக ரீதியான ஆதாயம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்