சானிட்டரி நாப்கின்கள் உடல் நலத்திற்கு ஏற்றதா?

சானிட்டரி நாப்கின்கள், உடல் நலத்திற்கு ஏற்றதா? சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானதா என்பது குறித்து, விவரிக்கிறது இந்த தொகுப்பு...
சானிட்டரி நாப்கின்கள் உடல் நலத்திற்கு ஏற்றதா?
x
தமிழ் நாட்டில், மொத்தம் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள், மாற்றுப் பொருட்களை நாடி வருகின்றனர். இந்த நிலையில், சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மாத விலக்கு சுழற்சியின்போது, சுகாதாரத்தை பேணுவதற்கு சானிட்டரி நாப்கின்களை, பெண்கள் பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருள் கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, பெண்களின் ஆரோக்கியத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, பல்துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நாப்கின், பருத்தியால் தயாரிக்கப்படுவதாகவும், அதிலுள்ள ஒருவித திரவம் நீண்டநேரத்திற்குப் பெண்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையிலேயே சானிட்டரி நாப்கின்களில், பருத்தி பயன்படுத்தப்பட்டால், அதனால் எப்படி எட்டு மணி நேரத்திற்கு தாக்குப் பிடிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தி விட்டு, நேரடியாக கழிவறைகளில் வீசுகின்றனர். அவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோர் கடுமையான சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாவதாக, கூறப்படுகிறது. 

நிலத்தில் குவிக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள், தானாக மக்கிப் போவதற்கு, 1000 ஆண்டுகள் வரை ஆகும். பிளாஸ்டிக் உள்ளிட்ட வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படும் இவற்றை எரிப்பதால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. சானிட்டரி நாப்கின்களின் நாள்பட்ட பயன்பாடு, பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். 

சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான ஒவ்வாமை மட்டுமின்றி, இறுக்கமான ஆடைகளை அணிவதால், பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும், மருத்துவர்கள் கூறுகின்றனர். பெண்கள் மாதவிலக்கின்போது, நான்கு மணிநேரத்திற்கு ஒன்று வீதம், ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கினை பயன்படுத்துவது மிக அதிகபட்சமாக புற்றுநோயை கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

சுற்றுச்சூழலுக்கு உகுந்த மற்றும் பாதுகாப்பான சானிட்டரி நாப்கின் பயன்பாடு குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரமிது... 

Next Story

மேலும் செய்திகள்