கர்நாடக அரசை கலைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி - பிரதமர் மோடி, அமித்ஷா மீது சித்தராமையா புகார்
கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மற்றும் பல மத்திய அமைச்சர்கள் முயன்று வருவதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மற்றும் பல மத்திய அமைச்சர்கள் முயன்று வருவதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார். பெங்களூருவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 50 முதல் 70 கோடி ரூபாய் தருவதாக பா.ஜ.க.வினர் பேரம் பேசியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றும், நாட்டின் பாதுகாவலரிடம் இந்த அளவுக்கு பணம் வந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இன்றைய கூட்டத்தில் பங்கேற்காத 3 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்தார். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர், அனைவரும் ஈகிள்டன் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story