மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் இளம் விஞ்ஞானி திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்துவதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்
x
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த திட்டத்துக்காக மாநிலங்கள் வாரியாக தலா மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இஸ்ரோவில் செயற்கைகோள் உருவாக்குவது தொடர்பான பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஒரு மாத கால பயிற்சியில்,  8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், தேர்வாகும் மாணவர்கள் இஸ்ரோவின் ஆராய்ச்சி கூடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நேரில் கண்டு அவர்களை மேம்படுத்திக்கொள்ளவும், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

* மேலும் மாணவர்களை கொண்டு ஒரு சிறிய செயற்கைகோள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். மாநில அரசுகளின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதில் தேர்வாகும் மாணவர்களுக்கான அனைத்து செலவுகளையும் இஸ்ரோவே ஏற்கும் என்று அப்போது அவர் தெரிவித்தார். 

* நாடெங்கிலும் மையங்களை திறக்கவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் திருச்சி, நாக்பூர், உள்ளிட்ட 4 இடங்களில் மையங்களை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

* மேலும் நாடெங்கிலும் கன்னியாகுமரி, ஜெய்ப்பூர், வாரணாசி உள்ளிட்ட 6 இடங்களில் ஆராய்ச்சி மையங்களை ஏற்படுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் சிறிய ரக செயற்கைகோள் ஒன்றை தயாரிக்கவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்