2 சுயே. எம்.எல்.ஏக்கள் திடீர் ஆதரவு வாபஸ் : கர்நாடகாவில் உச்சகட்ட குழப்பம்
2 சுயே. எம்.எல்.ஏக்கள் திடீர் ஆதரவு வாபஸ் : கர்நாடகாவில் உச்சகட்ட குழப்பம்
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க " ஆபரேஷன் லோட்டஸ்" என்ற பெயரில், பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதேநேரம் குமராசாமியும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை காப்பாற்ற பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. இந்த சூழலில், கர்நாடக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சுயேட்சை உறுப்பினர்கள் நாகேஷ் மற்றும் சங்கர் இருவரும் ஆளுநரை சந்தித்து, வாபஸ் கடிதத்தை ஒப்படைத்தனர். அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், பாஜகவின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story