2021 டிசம்பரில் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவர் -இஸ்ரோ தலைவர் சிவன்
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் வரும் 2021ஆம் ஆண்டு டிசம்பரில் மனிதர்களோடு செயற்கை கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
* பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் இஸ்ரோவுக்கு மிகப்பெரிய திருப்பு முனை திட்டமாக உள்ளதாக கூறினார்.
* 10 ஆயிரம் கோடி ரூபாயில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2020 டிசம்பர் மற்றும் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 2 ஆளில்லா விண்கலங்களை விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
* 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களை சுமந்து செல்லும் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் அந்த குழுவில் பெண்களை இடம் பெறுவார்கள்என்றும் அவர் தெரிவித்தார்.
* ககன்யான் திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பயிற்சி இந்தியாவிலும், உயர்மட்ட பயிற்சி ரஷ்யாவிலும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.
Next Story