ஜிஎஸ்டி வர்த்தக உச்சவரம்பு ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு - நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு
டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.
டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிஎஸ்டி செலுத்துவதற்கான வர்த்தக விலக்கு வரம்பு தொகை 20 லட்சத்தில் இருந்து 40 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தொகுப்பு திட்ட சலுகைக்கான வரம்பு ஆண்டுக்கு ஒன்றரை கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார், மேலும், இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருவோர், காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும் எனவும் கூறினார். இத்திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளதாக அப்போது அவர் கூறினார்.
Next Story