நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம்
மத்திய - மாநில அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் நாடு முழுவதும் தொடங்கியது
மத்திய - மாநில அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் நாடு முழுவதும் தொடங்கியது.
புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு - ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 15 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால், அரசு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, வங்கி பரிவர்த்தனை முடங்கும் சூழல் உருவாகி உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தி, மேற்குவங்க மாநிலம் ஹவுரா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, கொல்கத்தா, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ரயில் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள், பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.
Next Story