மேகாலயாவில் நீர் மட்டம் குறையாததால் சுரங்க பணியாளர்களை மீட்பதில் தொடர்ந்து இழுபறி
மேகாலயாவில், நீர் மட்டம் குறையாததால் 370 அடி ஆழத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் 15 சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து 22ஆவது நாளாக இழுபறி நீடிக்கிறது.
மேகாலயாவின் கிழக்கு ஜெயந்திலியா மலையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, 15 பணியாளர்கள் 370 அடி ஆழத்தில் மாட்டிக்கொண்டனர். இதனால் அவர்களை மீட்கும் பணியில் ஒடிஷா தீ அணைப்பு வீர்ர்களுடன், ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். எனினும் நீர்மட்டம் குறையாததால் மீட்பு பணியில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. நீரை வெளியேற்ற தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி காரணமாக ஒன்றரை அடி அளவுக்கு நீர் மட்டம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்றொரு பம்ப் பயன்படுத்தி, நீரை வெளியேற்றும் முயற்சியில் தீ அணைப்பு வீர்ர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story