சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த 2 பெண்கள்: என்.ஐ.ஏ., விசாரிக்க, பாஜக எம்.பி கோரிக்கை
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த மனுவில், சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்த கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோருக்கு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் எனக் கோரிககை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 559 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 628 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story