பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி

சிசிடிவியில் பதிவான முகமூடி அணிந்த நபர்
பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி
x
பாரத ஸ்டேட் வங்கியில் இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல வங்கியை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது வங்கியின் பின்பக்க ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபரால் பணம், நகைகளை கொள்ளை அடிக்க முடியாமல் திரும்பி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் அடிப்படையில் மர்மநபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்