இந்து அமைப்பினர் பிரமாண்ட பேரணி : சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பினர் பிரமாண்ட பேரணி.
இந்து அமைப்பினர் பிரமாண்ட பேரணி : சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு
x
திருவனந்தபுரம் பழவங்காடியில் ஒன்று திரண்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், அங்கிருந்து தலைமைச்செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். கூட்டத்தில் இருந்த சிலர் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கேரள போலீசார், போராட்டக்காரர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். கலைந்து செல்ல மறுத்த இந்து அமைப்பினர், தலைமைச்செயலகம் நோக்கி நடைபோட்டனர். தற்போது, கேரள தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்து அமைப்பினரின் பிரமாண்ட பேரணியால் திருவனந்தபுரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்