பசியால் துடித்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலருக்கு குவிகிறது பாராட்டு

ஹைதராபாத்தில், பசி தாங்காமல் துடித்த கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பசியால் துடித்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலருக்கு குவிகிறது பாராட்டு
x
ஹைதராபாத்தில், பசி தாங்காமல் துடித்த கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. உஸ்மானியா அரசு மருத்துவமனை வாசலில் நின்ற முஹம்மது இர்பான் என்பவரிடம், அந்த வழியாக வந்த ஒரு பெண், தமது கைக்குழந்தையை கொடுத்து பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாக அந்த பெண் வராததால், இர்பான், குழந்தையை அருகில் உள்ள அப்சல்கஞ்ச் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்த தலைமை காவலர் ரவீந்திரன், பசி தாங்காமல் குழந்தை கதறுவதை கண்டதும், பேகம்பேட் காவல் நிலைய தலைமை காவலரும், சமீபத்தில் குழந்தை பெற்றவருமான தமது மனைவி பிரியங்காவுக்கு தொலைபேசியில் தகவலை தெரிவித்தார். அங்கு வந்த பிரியங்கா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பசியாற்றினார். இந்த செய்தி பரவியதை அடுத்து, பிரியாங்காவுக்கும், ரவீந்திரனுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. இதனிடையே குப்பை பொறுக்கும் பெண்ணான அந்த குழந்தையின் தாயை எச்சரித்து அந்தக் குழந்தையை, காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்