உயர்கிறதா இ.பி.எஃப் வட்டி விகிதம் ?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதத்தினை உயர்த்துவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் அறிந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இதற்கான வட்டி விகிதம் அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு தணிக்கை பணிகளால் தாமதமாகியுள்ளதாகவும், பிப்ரவரி 1 -ம் தேதிக்கு முன்னர் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினர். இதனால் நாடு முழுவதும் மாத ஊதியம் பெறுபவர்களில் சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story