சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு : சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்கள்
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவை சேர்ந்த பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவை சேர்ந்த பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 5 பெண்கள் தலைமை செயலகத்துக்குள் கோஷம் எழுப்பியபடி அத்துமீறி நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அடுத்தடுத்த இந்த போராட்டத்தால் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story