ஆதார் எண் தவறாக பயன்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்
ஆதார் எண்ணை தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதார் எண்ணை தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புகார்களுக்கு உடனடியாக தீர்வுகாணவில்லை என்றால், தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஆதார் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட உள்ளது. குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க வேண்டியது அவசியம் என்றும், 18 வயது நிறைவடைவந்த பின்னர் அவர்களுக்கு புதிய ஆதார் எண் அளிப்பதை நடைமுறைப்படுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
Next Story