2018ல் சுற்றுலா வருவாய் ரூ.1,58,000 கோடி...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையால் இந்தியாவுக்கு, கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
2018ல் சுற்றுலா வருவாய் ரூ.1,58,000 கோடி...
x
* மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தனது ஆண்டு இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  5.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

* இதேகாலகட்டத்தில், இணையம் மூலம் இ-விசா பெறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும்  முந்தைய ஆண்டை விட 41 புள்ளி 5 சதவீதம் உயர்ந்துள்ளது.

* வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால், கடந்த ஆண்டு நவம்பர் வரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 846 கோடி ரூபாய் அந்நிய செலாவணி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 11 புள்ளி 9 சதவீதம் அதிகமாகும்.

* அதேபோல், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும், கடந்த ஆண்டை விட 2 புள்ளி 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

* மாமல்லபுரம், தாஜ்மஹால், எல்லோரா, டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட 17 இடங்களை புகழ்மிக்க சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவதற்கான பெருந்திட்டம் இறுதி கட்ட தயாரிப்பில் உள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இந்தியாவில் உள்ள 26 விமான நிலையங்களில் இ-விசா ஒப்புக் கொள்ளப்படுவதாகவும், 166 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இ-விசா வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றுலாதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்