ஆரோக்கியமான அழும் சங்கம் சார்பில் அழும் நிகழ்ச்சி...
புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில், கவலையை துறந்து, மகிழ்ச்சியை காணும் வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் "ஆரோக்கியமான அழும் சங்கம்" சார்பில் கண்ணீர் சிந்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில், கவலையை துறந்து, மகிழ்ச்சியை காணும் வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் "ஆரோக்கியமான அழும் சங்கம்" சார்பில் கண்ணீர் சிந்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மனதில் கவலை ஏற்படுத்திய எண்ணங்களை கொட்டித் தீர்த்து, அழுவதன் மூலம், மகிழ்ச்சி தங்கும் என்ற வகையிலும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தும் அடிப்படையிலும், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக குஜராத்தில், "ஆரோக்கியமான அழும் சங்கம்" தொடங்கப்பட்டது. இந்நிலையில், 2018ம் ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில், இந்த சங்கத்தின் சார்பில் பங்கேற்ற உறுப்பினர்கள், தங்களது கவலையைத் துறக்கும் வகையில் அழுதனர்.
Next Story