வேகமெடுக்கும் அனைவருக்கும் வீடு திட்டம் - "65 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது"
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2020-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
அனைவருக்கும் வீடு மற்றும் தூய்மை இந்தியா திட்டங்களை நாடு முழுவதும் முழுவீச்சில் செயல்படுத்த மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை ஆயிரத்து 612 நகரங்கள் "திறந்தவெளிக் கழிப்பு இல்லா' நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அதேபோல், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 65 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், 2020-ஆம் ஆண்டுக்குள் மேலும் 1 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் எனவும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
Next Story