2 ஆண்டுகளில் ரூ.7,00,000 கோடி அந்நிய முதலீடு - வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி டாலர் அந்நிய முதலீடு இந்தியா கொண்டுவரப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி டாலர் அந்நிய முதலீடு இந்தியா கொண்டுவரப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 7 லட்சம் கோடி ரூபாயாகும். சிறப்பு தொழில் மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் ஜப்பான், தென் கொரியா, சீனா, ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளன. இந்தியாவில் தொழில் தொடங்குமாறு வெளிநாடுகளில் கண்காட்சிகள் நடத்த உள்ளோம் என்றும் , தொழில் நடத்த எளிதான நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறி வருவதால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வரத் தயாராக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story