ஜிஎஸ்டி வரி மாதம் ரூ.97,100 கோடி வசூல் - நிதியமைச்சர் அருண்ஜெட்லி தகவல்
கடந்த ஆண்டைவிட, நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டைவிட, நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 18 மாதங்களில் மாநிலங்களின் வருவாய் இழப்பு பெருமளவு குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இலக்கை எட்டாத மாநிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடு, முதல் ஆண்டைவிட இரண்டாவது ஆண்டில் குறைந்துள்ளது என்றும் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். ஜிஎஸ்டி வருவாயை பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டில், சராசரி வரி வருவாய் ஒரு மாதத்துக்கு 89 ஆயிரத்து 700 கோடி ரூபாயாக இருந்ததாகவும், நடப்பாண்டில் இது 97 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story