ராகுல், பிரதமர் வேட்பாளர் : மம்தா பானர்ஜி எதிர்ப்பு

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாலர் விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ராகுல், பிரதமர் வேட்பாளர் : மம்தா பானர்ஜி எதிர்ப்பு
x
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளதாக குறிப்பிட்டார். ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என திமுக வெளியிட்ட அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போதே, பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தேவை இல்லை என்றார். தேர்தலுக்குப்பின்,அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்