பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரம் - காதலியுடன் மடாதிபதி கைது

கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரத்தில் காதலியுடன் மடாதிபதி கைது செய்யப்பட்டார்.
பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரம் - காதலியுடன் மடாதிபதி கைது
x
கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியான விவகாரத்தில் காதலியுடன் மடாதிபதி கைது செய்யப்பட்டார். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சுலவாடி கிராமத்தில் உள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் நடந்த விழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியானார்கள்.  இதுதொடர்பாக கோவில் நிர்வாகி மாதேசின் மனைவி அம்பிகாவை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சாளூர் மடத்தின் இளையமடாதிபதி மகாதேவசாமி கூறியதால் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக கூறினார். இருவருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்பிகா, அவரது கணவர் மற்றும் மகாதேவசாமி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்