சீக்கியர் கலவர வழக்கில் தீர்ப்பு : காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன்குமார் குற்றவாளி
சீக்கியர் கலவர வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1984ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரத்து 800 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கலவரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் மீதான வழக்கில் அவரை விடுவித்து, விசாரணை நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இதில் சஜ்ஜன் குமாருக்கு, ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் அவர் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Next Story