விவோ நிறுவனம் ரூ.4,000 கோடி முதலீடு : உ.பி யில் 2-வது ஆலை
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, உத்தர பிரதேச மாநிலத்தில் 169 ஏக்கரில் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, உத்தர பிரதேச மாநிலத்தில் 169 ஏக்கரில் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இங்கு ஏற்கெனவே 50 ஏக்கரில் ஆலை அமைத்துள்ள நிலையில், புதிய ஆலைக்காக 4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. உலக அளவில், ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியா முன்னிலையில் உள்ளதால் சாம்சங், ஓப்போ, ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன.
Next Story