பிளாஸ்டிக் தடையால் சபரியில் குறைந்தது மாசு
பிளாஸ்டிக் தடையால் சபரியில் குறைந்தது மாசு
கேரளா அரசின் உத்தரவைத் தொடர்ந்து சபரிமலை சன்னிதானத்தில் விரைவில் மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும் என அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலை பாதை மற்றும் சன்னிதானத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பம்பையில் மட்டுமே மாசு கட்டுப்பாடு ஆய்வகம் உள்ளதால், சன்னிதானத்திலும் மாசுக் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்குமாறு கேரள அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு விரைவில் ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story